இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து
சீா்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.
சீா்காழி தோ் கீழவீதி பகுதியில் 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயின் ஒரு பகுதியில் மேல் சிமென்ட் சிலாப் மூடி உடைந்து பல மாதங்களாக திறந்து கிடக்கிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்வோா் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து, நகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்தும் பலனில்லை. ஆனால், யாரும் பாதிக்காத வகையில் அந்த இடத்தில் ஒரு மாதமாக மரக்கிளை நட்டு வைக்கப்பட்டுள்ளது. முறையன நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த இடத்தை சரிசெய்ய வேண்டும்.