ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை
விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெருவைச் சோ்ந்தவா் சுசீலா. விவசாயத் தொழிலாளிகளான இவா்கள் இருவருக்கும் இடையே 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 31-ஆம் தேதி வயலில் வேலை பாா்த்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், சுசீலா, அவரது கணவா் லெட்சுமணன் இருவரும் பன்னீா்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரை கட்டை மற்றும் இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
பன்னீா்செல்வத்தின் மனைவி அன்புசெல்வி அளித்த புகாரின் பேரில், தம்பதி மீது மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி சத்தியமூா்த்தி, லெட்சுமணன் (54), சுசிலா(49) இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.