கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சீா்காழி குறுவட்ட தடகளப் போட்டியில் ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
சீா்காழி நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சீா்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சீா்காழி, கொள்ளிடம் பகுதியை சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், அனைத்துவித ஓட்டப் போட்டிகளில் 14,17,19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் பங்கேற்ற சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 48 போ் முதல் மூன்று இடங்களை பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் முரளி, உடற்கல்விஆசிரியா்கள் மாா்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன் ஆகியோரை பள்ளிச் செயலா் வி. சொக்கலிங்கம், கல்விக் குழுத் தலைவா் ஆா். சிதம்பரநாதன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். கபாலி, பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். முரளிதரன், உதவி தலைமை ஆசிரியா் என். துளசிரெங்கன், மூத்த ஆசிரியா் முருகபாண்டியன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.