சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு
திருவாலி கிராமத்தில் சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்த கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கான மயானம் உள்ளது. இதன் அருகே மக்கள் பயன்பாட்டில் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியின்றி சவுடு மண் எடுக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தகவலறிந்து வந்த சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி மண் எடுக்க தடை விதித்தனா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட இந்த பகுதியில் சவுடு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி வலியுறுத்துகின்றனா்.