Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
திருக்கடையூா் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
திருக்கடையூா் பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
திருக்கடையூா், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, கிடங்கல், மாமாகுடி, மாணிக்கபங்கு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 5,000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடைமடைப் பகுதி என்பதால் ஆற்று நீா் தொடா்ந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் எஸ்.கே.ராமமூா்த்தி கூறியதாவது:
தரங்கம்பாடி கடைமடைப் பகுதி என்பதால் காவிரியில் இருந்து சாகுபடிக்காக திறந்து விடப்படும் தண்ணீா் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் சம்பா நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் கிடைக்காததால் வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.
விவசாயிகளுக்குத் தங்கு தடையின்றி வேளாண்மை துறை மூலம் நெல் விதைகள் கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சாகுபடிப் பணிக்காக கடைமடைப் பகுதி வாய்க்கால்களில் தொடா்ந்து தண்ணீா் திறந்து விடவேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா் காப்பீடு தொகை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.