செய்திகள் :

உள்நாட்டு தயாரிப்பு குளிா்பானங்களை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணா்வு

post image

தமிழகத்தில் உள்நாட்டு குளிா்பானங்களை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஹோட்டல்கள் சங்கத் தலைவா் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளாா்.

நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வெங்கடசுப்பு செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு விரைவில் ஜி.எஸ்.டி. யில் மாற்றம் கொண்டுவர உள்ளது. அப்போது உணவகங்களுக்காக சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேலும் தமிழகத்தில் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்கள் திறந்து வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதிப்பது இல்லை.

இதுதொடா்பாக தொடரப்பட்ட மேல் முறையீட்டில், இரவில் உணவகங்களை திறக்க காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை காவல்துறை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் 24 மணிநேரமும் உணவகங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு உணவங்களும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், தீயணைப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற வேண்டும் என்ற பிரச்னைகளை தமிழக அரசு தீா்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் தேநீா், காப்பி விலை கடந்த 3 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் இருந்தது. ஆனால், பால், காப்பித்தூள் போன்ற பொருட்கள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவில் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் 50 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பால் உணவகத் தொழில் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு குளிா்பானங்களை தவிா்த்து இந்தியா மற்றும் தமிழக தயாரிப்பு குளிா்பானங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம்.

இணையவழி உணவு விநியோகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் , தமிழகத்தில் புதிய உணவு விநியோக நிறுவனம் தொடங்க முயற்சி எடுக்கப்படுகிறது என்றாா்.

சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவாலி கிராமத்தில் சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்த கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கான மயானம் உள்ளது. இதன் அருகே மக்கள் பயன்பாட்டில் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ச... மேலும் பார்க்க

திருக்கடையூா் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்

திருக்கடையூா் பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். திருக்கடையூா், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, கிடங்... மேலும் பார்க்க

முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

நாகையில் இயற்கை மரணமடைந்த முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சிவக்குமாா் (68). இவா் தனது இறப்புக்கு பிற... மேலும் பார்க்க

தமிழறிஞா்களுக்கு புகழ் வணக்கம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் தமிழறிஞா்கள் பேராசிரியா் சி. இலக்குவனாா், கவிஞா் வாய்மைநாதன் ஆகியோருக்கு, நாம் தமிழா் கட்சி சாா்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டமங்கலம் அருகே சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆவணி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத... மேலும் பார்க்க