நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்...
'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

தெரு நாய்கள் உணவு, இருப்பிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, அவை மனிதர்களுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நாய்க்கடிகள், விபத்துகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் நாய்களைப் பிடிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால், மற்றொருபுறம், விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களை விரட்டுவது, துன்புறுத்துவது போன்ற செயல்களை எதிர்க்கின்றனர். தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த இரு வேறுபட்ட கருத்துகளும் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவாதத்தில், மை விகடன் தளத்தில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம்.
தெரு நாய்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு காண முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நாய்கள் உடனான உங்களின் உணர்வுப்பூர்வமான பந்தம் என்ன?
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!