செய்திகள் :

பாதுகாப்பை லிப்ட் மூலமே உறுதி செய்யும் நாடு! - எங்கே?எப்படி?

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

  உலகில்  மக்கட்தொகை கூடக்கூட கட்டிடங்களும் தங்கள் உயரத்தைக் கூட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டன.முன்பெல்லாம் 50 மாடி,100 மாடிக் கட்டிடங்களை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டுமே காண முடியும் என்ற நிலையிருந்தது.

அப்புறம் அது மெல்ல வளர்ந்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது. பல மாடிக் கட்டிடங்கள் அதிக அளவில் முளைக்க ஆரம்பித்து விட்டன. இது எல்லா வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும்.

கட்டிடங்கள் ஹரிசான்டல் வளர்ச்சியிலிருந்து  (Horizontal Growth) வெர்டிகல் வளர்ச்சி(Vertical Growth)க்கு மாறி விட்டன.இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு.

வெர்டிகல் வளர்ச்சி விரைந்து நடைபெற பெரிதும் உதவுவது லிப்ட்கள் என்றால் அது மிகையில்லை.

சமீபத்தில் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது.

அங்கெல்லாங்கூட அதிக உயரம்கொண்ட பில்டிங்குகள் நிறைய வந்து விட்டன. மலேசியாவில் 36 மாடிகள் கொண்ட ஒரு உயரமான பில்டிங்கின் 12 வது மாடியில் இரண்டு நாட்கள் தங்கினோம்.பன்னிரண்டாவது மாடியில் நாங்கள் தங்கியது இரண்டு பெட்ரூம்கள் கொண்ட ஒரு வீட்டில்தான்.ஏர் பிஎன்பி (Air bnb) என்றும் ஹோம் ஸ்டே (Home Stay) என்றும் அழைக்கப்படும் இம்முறையில்,வீட்டு உரிமையாளர்கள்,ஆன்லைனில் தங்கள் வீடுகளை 2,3 நாட்களுக்குக்கூட வாடகைக்கு விடுகிறார்கள். எல்லாமே ஆன்லைன் ட்ரான்சாக்‌ஷன்தான்.

    அப்படித் தங்கியிருக்கையில், நம்மிடம் ஒரு கார்டைக் கொடுத்து விடுகிறார்கள்.

லிப்டின் உள்ளே சென்றதும் அங்குள்ள சென்சாரில் நம் கார்டைக் காட்டினால் மட்டுமே லிப்ட் இயங்க ஆரம்பிக்கிறது. இயங்கும் அந்த லிப்ட் நமது ப்ளோருடன் 

(12 வது மாடி)நின்று விடுகிறது. அதற்குமேல் நம்மால் செல்ல முடியாது. ஒரு வேளை 36 வது மாடிக்காரர் நம்முடன் லிப்டில் வந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு செல்ல இயலும்.இந்தக் கட்டுப்பாடு மேலே செல்லும்போது மட்டுமே! இறங்கி வருகையில் 

சாதாரண லிப்ட்கள் போலவே இயங்குகின்றன.

    அதே முறை, சிங்கப்பூர் ஸ்டார் ஹோட்டலில் தங்கும்போதும் பின்பற்றப்படுவதைக் கண்டோம். அறையில் தங்குபவர்கள்கூட தேவையற்ற இடங்களுக்குச் செல்வதை இம்முறை தடுப்பதுடன்,சரியான பாதுகாப்புக்கும் வழி வகுக்கிறது.

    உலகின் பல நாடுகளைச் சுற்றியபோதும்,வேறு எந்த நாட்டிலும் இந்தக் கட்டுப்பாட்டு முறையை லிப்டில் யாம் கண்டதில்லை.நமது நாட்டில் இனிமேல்தான் இது புழக்கத்திற்கு வருமென்று தோன்றுகிறது. சீனாவில் இம்முறை கையாளப்படுகிறதாவென்று நமக்குத் தெரியவில்லை. ஏனெனில் இன்றைய தேதியில் விஞ்ஞான முன்னேற்றங்களைக் கையாள்வதில் அந்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

   எது எப்படியோ,சில விஞ்ஞான சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன;

நமது வாழ்க்கையை எளிதாக்குகின்றன;அந்த வகையில் லிப்ட்கள் ஒரு வகையில் நம்மை உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன!உயரத்திற்குக் கொண்டு செல்வதோடு 

பாதுகாப்பையும் வழங்க முற்பட்டிருக்கின்றன.இதனைக் கண்டு பிடித்தவர்களுக்

கெல்லாம் நன்றி சொல்லும் கடமை நமக்கிருக்கிறது!

-ரெ.ஆத்மநாதன்,

 கூடுவாஞ்சேரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

நாம் ஏன் நேர்மையை பல இடங்களில் தியாகம் செய்கிறோம்?- மறந்துபோன பண்புகள் -1

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`கடிதங்கள் எழுதிய அந்த நாள்கள் இனிய நினைவுகளால் நிரம்பியவை' - Post Box குறித்த நெகிழ்ச்சி பகிர்வுகள்

`தபால் பெட்டி சேவை நிறைவு'2025 ஜூலை மாதம், இந்திய தபால் துறையின் முக்கியமான அறிவிப்பொன்று செய்திகள் வாயிலாக பரவியது. "மிக விரைவில், பெரும்பாலான தபால் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ளன; தற்போத... மேலும் பார்க்க

கஃபேக்களில் மட்டும் கிடைக்கும் வைஃபை - மொபைல் இணைய வசதியில்லாத நாடு பற்றி தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது பலருக்கு கற்பனை செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த மொபைல் இணைய வசதி, சமூக ஊடகங்கள் மற்றும் ஏடிஎம் வசதிகள் இல்லாத ஒரு விசித்திரமான நாடு... மேலும் பார்க்க

``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்னென்ன என்ற கேள்விக்கு, உணவு, உடை, இருப்பிடம் என பள்ளிக்கூடத்தில் பதிலளித்திருப்போம். ஆனால், அவை பல தலைமுறைகளாக கிடைக்கப்பெறாத மக்களும் நமக்கு நடுவே பாதையோரங்களில் வாழ்... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். சொல்போனை ஏரோபிளேன்... மேலும் பார்க்க

எல்லோர் மனதிலும் பரவச அலைகளை ஏற்படுத்திய சதாபிஷேக கல்யாணம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க