செய்திகள் :

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

post image

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் பகுதியில் ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதாரத் இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக சென்னை மாநகராட்சி கட்டடம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடும் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டதோடு, போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து அறிந்த தூய்மைப் பணியாளர்கள், நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று என்று தெரிவித்துவிட்டனர்.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க