செய்திகள் :

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

post image

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் இருபாலா் பயிலும் தனியாா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணைப்பட்டி, கே.கே.பட்டி, உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இதில், வெளியூா்களைச் சோ்ந்த மாணவா்கள் பலா் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனா். உத்தமபாளையம் வட்டம் கோம்பை-துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன்- சுகன்யா தம்பதியினரின் ஒரே மகனான சாய் பிரகாஷ் (13), இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது பெற்றோா் கேரளத்தில் ஏலக்காய்த் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா்.

விடுதி மாணவா்கள் பள்ளி வளாகத்தில் கால்பந்து, கைப்பந்து, கபடி, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைப் பயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையில் கல்லூரியில் படித்து வரும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரருமான திபேஸ் (19), இந்தப் பள்ளியில் வந்து சில நாள்களாகப் பயிற்சி பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது அவா் எறிந்த ஈட்டி, மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு மாணவரின் தலையில் குத்தியிருந்த ஈட்டியை எடுத்த பின்னா், மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவா் சாய் பிரகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 6 நாள்களுக்குப் பின் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க