செய்திகள் :

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

post image

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் வெளியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாத்தை ஏற்றுக்கொண்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கைது ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, அதிபர் யூன் சுக் இயோல் டிசம்பர் மாதத்தில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். ராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் உத்தரவு கைவிடப்பட்டது.

இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரிய வரலாற்றில் அதிபராக இருப்பவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த நிலையில், அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

South Korea Former First Lady Kim Keon Hee arrested in corruption probe

இதையும் படிக்க : இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இர... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதிட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு

வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஹசீனா தரப்புக்கு ... மேலும் பார்க்க

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய்... மேலும் பார்க்க