செய்திகள் :

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்பு என்ன தெரியுமா?

post image

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியாது.

விலையுயர்ந்த கார்களை வாங்கி அழகுபார்ப்பதில் அவருக்கு அலாதி பிரியம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவரிடம் லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, எல்டபிள்யூபி, உருஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 V8, போர்ஷே 911 கரேரா எஸ் உள்ளிட்டப் பல கார்களை வைத்திருக்கிறார்.

அவரிடம் இல்லாத பிராண்ட் கார்களில் மிக முக்கியமானது ஃபெராரி. தற்போது அந்த பிராண்ட் காரையும் வாங்கிவிட்டார். ஃபெராரி புரோசங்க்கு (Ferrari Purosangue) எஸ்யூவி இத்தாலிய சூப்பர்கார் தயாரிப்பாளரின் முதல் எஸ்யூவி இதுதான்.

Ferrari Purosangue
Ferrari Purosangue

இது கேரள மாநிலத்திலேயே முதல் ஃபெராரி புரோசங்க்கு இந்த கார் மட்டுமே. வெள்ளை முத்து நிறமான Bianco Cervino என்ற கிளாசிக் ஷேடை தேர்வு செய்திருக்கும் பஹத் பாசில், தன் ரசனைக்கு ஏற்றவாரு பல அலங்கார மாறுதல்களையும் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவிலேயே உள்ள ஃபெராரி புரோசங்கு கார்களில் மிகவும் தனித்துவமான வடிவமைப்புகளில் ஒன்றாகவே பஹத் பாசிலின் கார் இருக்கிறது.

ஃபெராரி புரோசங்கு, வரிசையில் உள்ள முதல் மற்றும் ஒரே எஸ்யூவி ஆகும். இதனை சிறப்பானதாக மாற்ற, ஃபெராரி இந்த எஸ்யூவியில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தியுள்ளது. இந்த இன்ஜின் 725 PS சக்தியையும், 716 Nm உச்ச திறனையும் உருவாக்கக்கூடியது.

ஃபெராரி புரோசங்கு, லம்போர்கினி உருஸ் மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் DBX போன்ற கார்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே அதன் ஷோரூம் விலை சுமார் ரூ.10 கோடி. ஃபஹத் ஃபாசில் பல மாறுதல்களைச் செய்திருப்பதால், அவர் இதைவிட அதிகமாகப் பணம் செலுத்தியிருக்கலாம்.

ஃபெராரி புரோசங்கு கார் பெங்களூருவைச் சேர்ந்த கார் சேகரிப்பாளர் பூபேஷ் ரெட்டி, தமிழ் நடிகர் விக்ரம், ஆகாஷ் அம்பானி போன்றவர்கள் வைத்திருக்கின்றனர். அம்பானி குடும்பம், ஒன்றுக்கு பதிலாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு ஃபெராரி புரோசங்கு கார்களைக் கொண்டுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக

இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் விரைவு திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதைத்... மேலும் பார்க்க

பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. viral videoமின்சார கம்பத்தின் மேலேறிய இள... மேலும் பார்க்க

School Fees: "1-ம் வகுப்புக்கு ரூ. 8 லட்சம்" - வைரலான பள்ளிக் கட்டணம்; நிதி ஆலோசகர் சொல்வது என்ன?

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. 'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான ... மேலும் பார்க்க

`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்

சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கல... மேலும் பார்க்க

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை!

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்த... மேலும் பார்க்க

Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது... மேலும் பார்க்க