சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்
திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது:
திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆக. 2-இல் தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவடைந்துள்ளது. நலம் காக்கும் முதல் வாரம் (ஆக. 2)- 44,795, இரண்டாம் வாரம் (ஆக. 9) - 48,046, மூன்றாம் வாரம் (ஆக.23)-56,245 என பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
அதேபோல், இந்த மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி பகுதியில்-1,405, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முகாமில் 1,949, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முகாமில் 1,778 பயனாளிகள் என மொத்தம் 5,132 போ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தற்போது வரை மாவட்டத்தில் பயனடைந்துள்ளனா். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரைமணி நேரத்துக்குள் அங்கீகார அட்டையும் மற்றும் பரிசோதனை அறிக்கையும் வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.