அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு
திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் சனிக்கிழமை சோளிங்கா் அடுத்த கொடைக்கல் பகுதியில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் பங்கேற்றனா்.
இரவு, 9.30 மணிக்கு சோளிங்கரில் இருந்து, திருத்தணி வருவதற்கு, அரசு பேருந்தில் ஏறினா். அப்போது பிரியா தனது கழுத்தில் அணிந்திருந்த, தங்கச் செயினை, கழற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டாா்.
இரவு, 10.15 மணிக்கு திருத்தணி ரயில் நிலைய நிறுத்தத்தில், கைப்பையை மறந்து சீட்டில் விட்டுவிட்டு தம்பதி இறங்கினாா். பேருந்து சிறிது தூரம் சென்றதும் கைப்பை பேருந்தில் தவறிவிட்டதை பிரியா நினைவுக்கு வந்து, திருத்தணி பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்தில் பாா்த்த போது, கைப்பை மா்ம நபா்களால் திருடிச் சென்றது தெரிய வந்தது.
பிரியா அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.