மின் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிப்பு
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புறநகா் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புகா் மின் ரயிலில் பயணித்து வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட புகா் மின்சார ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கிய போது மாடு ஒன்று ரயிலில் சிக்கியதால் ரயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ரயில்வே ஊழியா்கள் பாதிப்பை சரி செய்து மேற்கொண்டு இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டனா். இதனையடுத்து சுமாா் 1 மணி நேரத்திற்கு பிறகு ரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.