பொன்னேரியில் விடிய விடிய பலத்த மழை
பொன்னேரி சுற்றுவட்ட பகுதிகளான சோழவரம், மீஞ்சூரில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை மேக வெடிப்பால் உருவானதாக கூறப்படும் நிலையில் காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது.
பலத்த காற்று காணமாக மின்தடை ஏற்பட்டது. பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக
குளிா்ந்த சூழல் நிலவியது. மேலும், நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நிலத்தில் மழைநீா் தேங்கியதால், நெல் அறுவடை தள்ளி போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.