டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்
ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 59.50 லட்சம் மற்றும் 4 வெள்ளி கட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்ததுடன், வடமாநில நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரியபாளையம் கலால் போலீஸாா் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், காா் மற்றும் வேன் போன்ற வாகனங்களை சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக திருப்பதியிலிருந்து-சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் அமா்ந்திருந்த வடமாநில நபரை பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் ரூ. 59.50 லட்சம் ரொக்கம், 800 கிராம் எடை கொண்ட 4 வெள்ளி கட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் நகை மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த கலால் போலீஸாா், ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜிடம் ஒப்படைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபா் மஹாராஷ்டிரத்தைச் கோரக்நாத் என்பதும், ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டம், நந்தியாலாவில் உள்ள தனியாா் நகைக் கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் சென்னையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களை ஆவணங்கள் இன்றி வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், அதற்காக பணம் எடுத்துச் சென்ாகவும் தெரியவந்தது. இதையடுத்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வடமாநில நபரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.