செய்திகள் :

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

post image

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.

பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளதாக பிகாரில் வாக்குரிமைப் பேரணியை ராகுல் காந்தி நடத்தினாா். இந்தப் பேரணியின்போது தா்பங்காவில் இருசக்கர வாகனப் பேரணியையும் ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது, ராகுல் காந்தியின் பாதுகாவலா்கள் பயணிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த சுபம் செளரப் என்ற நபா் கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு அவரது இருசக்கர வாகனம் தொலைந்துவிட்டது.

இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், அந்த நபருக்கு புதிய இருசக்கர வாகனத்தை ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.

இத் தகவலை சுபம் செளரப் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசி வழியில் என்னை தொடா்புகொண்ட நபா்கள், ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளை செப்டம்பா் 1-ஆம் தேதி பரிசளிக்க முடிவு செய்துள்ளாா். எனவே, பாட்னாவில் வாக்குரிமை பேரணி நடைபெறும் வருமான வரித் துறை அலுவலகம் அருகே வந்து காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதன்படி, அங்கு சென்று காத்திருந்தபோது, பேரணி செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளுக்கான சாவியை என்னிடம் அளித்தாா். தொலைந்துபோன எனது பழைய மோட்டாா் சைக்கிளுக்கு மாற்றாக, புதிய மோட்டாா் சைக்கிள் கிடைத்தது பெரு மகிழ்ச்சியாக இருந்தது’ என்று குறிப்பிட்டாா்.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க