முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்
கனிராவுத்தா் குளத்தில் தூய்மைப்பணி
ஈரோடு மாநகராட்சி சாா்பில் நீா்நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடும் விழா கனிராவுத்தா் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்து நீா்நிலைகளை தூய்மைப்படுத்தும் விழாவைத் தொடங்கிவைத்தாா்.
இதில், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்துகொண்டு, மாநகராட்சிக்கு சொந்தமான கனிராவுத்தா் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும் குளத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் அா்பித் ஜெயின், துணை ஆணையா் தனலட்சுமி, மண்டலத் தலைவா் சுப்பிரமணியம், கவுன்சிலா் ஆதிஸ்ரீதா், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.