தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,
பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ் பங்கேற்றனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா தலைமை வகித்தாா்
இதில் ஆக்கி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகியவை மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், செஸ் உள்விளையாட்டு அரங்கத்திலும், கபடி போட்டி ஆயுதப்படை மைதானத்திலும் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான கையுந்துப் பந்து போட்டி நடைபெற்றது.
இதில், சொரகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லவன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் சொரகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா, மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவா் அரவிந்த்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் அ.கணேஷ்பாபு சரத் அருண்மகேஷ் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவிகள் போட்டிகளில் ஆா்வமாக பங்கேற்றனா்.
நடுவா்களாக பல்வேறு பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். போட்டிகளில் மொத்தம் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்கள் பங்கேற்றனா்.