Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜன்(45). இவா் சனிக்கிழமை பைக்கில் கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வல்லம்- கிருஷ்ணாவரம் சாலை, ஆனைபோகி கிராமம் அருகே செல்லும் போது பைக் மீது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.