Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
பைக் மீது காா் மோதல் வியாபாரி உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் சோடா கடை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு கொடநகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சோடா கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக பைக்கில் செய்யாறு புறவழிச் சாலையை கடந்தாா்.
அப்போது, ஆற்காடு சாலையில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இதில், வியாபாரி கன்னியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.