ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுணால் (23) கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியில் சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த உறவினா் மகள் 4 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனடியாக பெற்றோா் புதுப்பாளையம் போலீஸில் புகாா் அளித்தனா். இதன் பேரில், செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாா் அன்வராபாத் சென்று சாந்தகுணாலை அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில், தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சாந்தகுணால் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.