விவோ எக்ஸ் 300 கேமராவின் சிறப்புகள் என்னென்ன?
விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மற்றும் விவோ எக்ஸ் 200 எஃப்இ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை நேற்று (ஜூலை 14) இந்திய சந்தையில் அறிமுகப்பத்திய நிலையில், விவோ எக்ஸ் 300 என்ற ஸ்மார்ட்போனை அடுத்ததாக விவோ அறிமுகம் செய்யவுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் அடுத்ததாக விவோ எக்ஸ் 300 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் மைக்ரோபிளாகிங் என்ற தொழில்நுட்ப செய்தி நிறுவனம் விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஃபிளாக்ஷிப் வகையில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 200MP கேமரா உள்ளது. அல்ட்ராவைட் படங்களை எடுக்க 50MP கேமராவும், ஜூம் வசதிக்காக IMX882 சோனி சென்சார் உடைய 50MP கேமராவும் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அல்ட்ராசானிக் விரல்ரேகை பதிவு அம்சத்துடன் 6.3 அங்குல உயரத்தில் தயாரிக்கப்படும்.
கடந்த அக்டோபர் மாதம் விவோ எக்ஸ் 200 ஸ்மார்ட்போனை சீனாவில் விவோ அறிமுகம் செய்தது. இது 6.67 அங்குல உயர அமோலிட் திரை கொண்டது.
அதனால், விவோ எக்ஸ் 300 சற்று சிறியதாக இருக்கும் எனத் தெரிகிறது. 5,800mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை விட இதில் கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க |அதிக பிக்சல் திறனுடன் புதிய ஸ்மார்ட்போன்! விவோ எக்ஸ் 200 எஃப்இ அறிமுகம்!