வேலையில்லா பட்டதாரி டு குடும்பஸ்தன்! - என் த்ரில் பயணம் | #ஆஹாகல்யாணம்
லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு காரணமான இங்கிலாந்து வீரர் காயத்தால் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஒருவர் விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. அதன்பின்னர், ஜடேஜா - சிராஜ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை மீட்கப் போராடினர். கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சோயிப் பஷீர் வீசிய பந்தில் சிராஜ் போல்டானர்.
போட்டியின் போதே சுண்டு விரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த 21 வயதான சோயிப் பஷீர், சிராஜ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில், சுண்டு விரலில் எலும்பு முறிவால் அவதிப்பட்டுவரும் அவருக்கு இந்த வார இறுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், அவர் இந்தத் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23 ஆம் தேதி தொடங்குகிறது. எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படும்.
சோயிப் பஷீருக்குப் பதிலாக ஜாக் லீச் அல்லது லியாம் டாஸன் இருவரில் ஒருவர் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shoaib Bashir Ruled Out Of Last Two Tests Against India Due To Serious Injury
இதையும் படிக்க :100-வது போட்டியில் சாதனை மழை! மிரட்டும் மிட்செல் ஸ்டார்க்!