கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா டிரைலர்!
தணிக்கை வாரியத்தால் சர்ச்சையைச் சந்தித்த ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்துக்கு, “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” (Janaki vs State Of Kerala) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இதில், ஜானகி என்பது சீதையின் மறுபெயர் எனக் கூறி அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த 2 வாரங்களில் 4 முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
அதனால், படத்திற்கு ”ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” எனப் பெயர் மாற்றப்பட்டு வருகிற ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: மீண்டும் வருகிறார் ஹாரி பாட்டர்..! இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். வழக்குரைஞராக சுரேஷ் கோபியும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.