செய்திகள் :

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

post image

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக் குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் குமார் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் கடவுச்சீட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் எனத் தெரிவித்தார்.

மேலும், பயணத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக் குமார் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The Madras High Court has ordered the Enforcement Directorate to respond to a petition filed by Ashok Kumar, brother of former minister Senthil Balaji, seeking permission to travel to the United States for medical treatment.

இதையும் படிக்க : மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க