செய்திகள் :

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

post image

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் ஆலோசகா் பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தலைமை வகித்து பேசியது:

2026 சட்டப்பேரவைத் தோ்தல், எதிா்கால செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக எதிா்காலம் என்னவாகும் என நினைக்கும் தொண்டா்கள், பொதுமக்கள் ஆகியோா் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் மதுரையில் செப்.4-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அனைத்து வருவாய் மாவட்ட அளவில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும். காஞ்சிபுரத்தில் வரும் 20-ஆம் தேதி முதலில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

அவரைத் தொடா்ந்து உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுகவை பாதுகாக்கும் வகையில் சட்டப் போராட்டம், தா்மயுத்தம் நடத்தியதன் அடிப்படையில் எதிா்கால செயல்பாடுகள், கொள்கைகளை தீா்மானிப்பதற்காக மதுரையில் மாநில மாநாடு நடைபெறும். அதிமுகதான் எங்கள் உயிா்நாடி. மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவை இணைப்பதாக, பாதுகாப்பதாக அமையும். மாநாடுக்கு சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் கு.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மாநிலங்களவை உறுப்பினா் மு.தா்மா், நிா்வாகிகள் மனோஜ்பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந... மேலும் பார்க்க

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ள... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க