செய்திகள் :

வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் பலி!

post image

பா. இரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் விபத்தால் பலியானார்.

தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.

இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழுநீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி கும்பகோணத்தில் முடிந்த நிலையில், நேற்று (ஜூலை 13) முக்கியமான சண்டைக் காட்சியொன்று வேளாங்கண்ணி பேராலயம் அருகே எடுக்கப்பட்டது.

அப்போது, கார் துரத்தல் காட்சியில் காரை பறக்க வைப்பதற்கான முயற்சியின்போது காரை வேகமாக ஓட்டிவந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியதுடன் வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நடிகை சரோஜா தேவி காலமானார்!

stunt master mohan raj dies in vettuvom shooting spot directed by pa. ranjith

சரோஜா தேவி ஏன் ஒரு நடிகரைத் திருமணம் செய்யவில்லை?

நடிகை சரோஜா தேவி காதல் மற்றும் திருமணம் குறித்து பேசியவை...நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று பெங்களூருவில் காலமாகிவிட்டார். நடித்துவந்த காலத்தில் எத்தனை லட்சம் கண்களைத் தன் கண்களால் ஈர்த்திருப்... மேலும் பார்க்க

கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் சரோஜா தேவி!

இந்திய திரையுலக வரலாற்றில் அதிக திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானார்.கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பக... மேலும் பார்க்க

விஜய்யின் ஜன நாயகன் பட பாணியில் விம்பிள்டன் நாயகன் சின்னர்!

விம்பிள்டன் வென்ற யானிக் சின்னருக்கு விம்பிள்டன் நிர்வாகம் விஜய்யின் ஜன நாயகன் பட பாணியில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ய... மேலும் பார்க்க

தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவருக்கும் பொருத்தமாக இருந்த சரோஜா தேவி!

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கால... மேலும் பார்க்க

ஜீவா - 46: மீண்டும் இணையும் பிளாக் கூட்டணி!

நடிகர் ஜீவா பிளாக் படத்தை இயக்கிய இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் ... மேலும் பார்க்க

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் க... மேலும் பார்க்க