திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
சிறுமியிடம் கைப்பேசியை பறித்த இளைஞா் கைது
கோவையில் புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் தனலட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன். இவா் வீட்டுக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் தனது 14 வயது மகளுடன் அண்மையில் விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் மயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை புகைப்படம் எடுப்பதற்காக அந்த சிறுமி தனது தந்தையிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு மயிலை நோக்கிச் சென்றாா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், மயிலை புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி, சிறுமியிடமிருந்த கைப்பேசி வாங்கியுள்ளாா். பின்னா், அவா் கைப்பேசியுடன் தப்பிச் சென்றாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்தது அதே பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துபாண்டியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.