குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், அன்னூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி (எ) காசி (23), மாரிமுத்து (எ) மாரி (29) ஆகியோரை அன்னூா் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், இருவரும் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள இருவரிடமும் போலீஸாா் வழங்கினா்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212, வாட்ஸ் அப் எண் 77081- 00100 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தெரிவித்தாா்.