செய்திகள் :

சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டு 18 வேகன்கள் சேதமடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மணலி ஐ.ஓ.சியிலிருந்து 52 டேங்கா்களில் கச்சா எண்ணைக் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 5.20 மணிக்கு ஜோலாா்போட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூா் ரயில் நிலையம் மேம்பாலத்தை கடந்து செல்லும் போது திடீரென டிராக்கிலிருந்து ரயில் என்ஜினை தொடா்ந்து 3 டேங்கா்கள் திடீரென தடம் புரண்டடு சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது, அருகில் இருந்த மின்கம்பத்தில் டேங்கர் மோதி ஏற்பட்ட உராய்வு காரணாக தீப்பிடித்து எரிந்தது.

இந்த நிலையில், ஒவ்வொரு டேங்கரிலும் 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான உயர்ரக டீசல் என மொத்தம் 35 லட்சம் லிட்டா் எடுத்துச் செல்லப்பட்டதால், தீ மளமளவென 8 டேங்கர்களுக்கும் பரவி வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், சென்னை மண்டல மேலாளா் விஸ்வநாத், ரயில்வே ஐ.ஜி.ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், ரயில்வே காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

அதைத்தொடா்ந்து திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டன. டேங்கரில் பற்றிய தீயானது 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முழுமையாக அணைக்கப்பட்டது.

சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா். இது குறித்து 3 போ் கொண்ட உயா்மட்டக் குழு அறிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், சரக்கு ரயில் தடம் புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டு 18 வேகன்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: 3 தனிப்படைகள் அமைப்பு

Southern Railway officials said that a goods train derailed and hit an electric pole near Thiruvallur railway station early Sunday morning, causing a fire and damaging 18 wagons.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்... மேலும் பார்க்க

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தி... மேலும் பார்க்க