Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" - பா...
அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்த மூன்று மணிநேரத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோவையில் மலையையொட்டியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை