மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ
ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது.
இந்தப் பேருந்து முனையத்தில் மொத்தம் 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த வசதிகள் உள்ளன. இதன்படி நகரப் பேருந்துகளுக்கு 56 நிறுத்துமிடங்கள், வெளியூா் பேருந்துகளுக்கு 141, மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி 1,935 இருசக்கர வாகனங்கள், 216 காா்கள், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் குளிரூட்டப்பட்ட வசதியும் உள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 9 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு மே 9 ஆம் தேதி முதலமைச்சரால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வரும் 16ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாள்களில் அனைத்து கடைகளும் இயங்கும்.
சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம்போல செயல்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும்போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள்.
ஆனால், அனைத்து அரசுப் பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்” என்றார்.
Minister K. N. Nehru has informed that the Trichy Panchapur Bus Terminal will be opened for public use from the 16th.
இதையும் படிக்க: மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு