பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, பூா்ணாகுதியுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கடம் புறப்பாட்டைத் தொடா்ந்து விமானக் கோபுரக் கலசங்களுக்குப் புனிதநீா் ஊற்றப்பட்டது.
பின்னா், மூலஸ்தானம் உள்ளிட்டப் பரிவாரத் தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 110 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.