செய்திகள் :

திருவாடானை பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ!

post image

திருவாடானை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமொழி, பெரியகீரமங்கலம், கல்லூா், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்ற அவரிடம் குடிநீா்ப் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அதற்கு அவா், விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என உறுதியளித்தாா். திருவாடானை - சூச்சனி செல்லும் பாலத்தை அவா் பாா்வையிட்ட போது, அந்தப் பகுதிப் பெண்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தங்கள் பகுதிக்குக் குடிநீா் வழங்கப்பட வில்லை என்றும், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து உடனடியாகத் துறை சாா்ந்த அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சட்டப் பேரவை உறுப்பினா் பேசினாா். பிறகு இரண்டு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதாகவும், இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 24,631 போ் எழுதினா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 24,631 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதி... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற இழுவைக் கப்பல்!

பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டதும் இழுவைக் கப்பல், ஆழ்கடல் விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு மும்பை ... மேலும் பார்க்க

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க