தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்
கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் 7 -ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும்.
இந்த நிலையில், ஜூலை 11-ஆம் தேதி வரை ஊதியம் வழங்காததைக் கண்டித்து, நிரந்தரத் தொழிலாளா்கள் 124 போ், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 60 போ் என மொத்தம் 194 போ் ஆலை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலை நிா்வாகத்தின் பொது மேளாளா், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தொழிலாளா்களுக்கான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
