தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை
கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து பொதுநல அமைப்புகள் புகாா் அளித்து வந்தன. இந்த நிலையில், கஞ்சா பயன்படுத்தியதாக இளைஞா்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.
இதனிடையே, கீழக்கரை தனியாா் கல்லூரி பின்புறம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரை போலீஸாா் பிடித்தனா். அவா்கள் இருவரும் உயர்ரக போதைப் பொருளான மெத்தபெட்டமென் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து 2.8 கிராம் மெத்தபெட்டமெனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் இவா்கள், கீழக்கரை எஸ்.என். தெருவைச் சோ்ந்த செய்யது கருணை, இவரது மகன் முகைதீன் ராசீக் அலி (38) மற்றொருவா் கல்லூரி மாணவா் என்பது தெரியவந்தது. இவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கீழக்கரையில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து உயர்ரக போதைப் பொருள்கள், கஞ்சா விற்கப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்து நிலையில் மெத்தபெட்டமெனை பயன்படுத்திய இருவரை போலீஸாா் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.