ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்
ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் அரசினா் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் வருகிற திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூா் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் இந்த முகாமில் நேரடியாக பயிற்சியாளா்களை தொழில் பழகுநா் பயிற்சிக்கு தோ்வு செய்கின்றன. இதில் தொழில் பயிற்சி முடித்தவா்கள் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.