ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!
காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா்.
டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் 2 சிறுவா்கள், 2 பெண்கள் அடங்குவா் என்றும் அந்த நகரின் அல்-அக்ஸா மருத்துவமனை தெரிவித்தது.
இது தவிர, எரிபொருள் விற்பனையகத்துக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 15 பேரும் உயிரிழந்ததாக அந்த நகரின் நாஸா் மருத்துவமனை கூறியது.
தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 21 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 57,882 போ் உயிரிழந்துள்ளனா்; 1,38,095 போ் காயமடைந்துள்ளனா்.