செய்திகள் :

சென்னை கூவம் ஆற்றில் கிடந்த இளைஞர் சடலம்; பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது

post image

கடந்த 8.7.2025 அன்று C3 ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்வார்ப் என்ற இடத்தில் (M.S. நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு பின்புறம்) கூவத்தில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களுடன் வேலா, வ/40, சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி என்பவர் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த C3 போலீசார் கூவத்தில் மிதந்து கொண்டிருந்த பிரேதத்தை கரைக்குக் கொண்டு வந்து சோதனை செய்ததில், டீசர்ட் மற்றும் டவுசர் அணிந்த பெயர் விலாசம் தெரியாத சுமார் 27 வயது மதிக்கத்தக்கவராகத் தெரிந்தார்.

காதில் வளையம் அணிந்திருந்த வெளிமாநிலத்தவர் போன்று காணப்பட்டவரது கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்டது போன்ற அடையாளத்துடன் வலதுபுற கழுத்தில் புஜம் வரை கன்றிய காயமும் காணப்பட்டதால், பிரேதத்தை பிற்பகல் 14.20 மணிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, சந்தேக மரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

கைதானவர்களில் ஒருவர்
கைதானவர்களில் ஒருவர்

மேலும் சம்பவயிடத்திற்கு பூக்கடை உதவி ஆணையர் தலைமையில், C-3 ஏழுகிணறு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவல் குழுவினர், அப்பகுதியில் விசாரணை செய்து நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் அவ்விடத்திற்கு வந்த வாகனங்களின் பதிவு எண்ணைக் கண்டறிந்து விசாரணையைத் துவக்கினர்.

இந்நிலையில் கடந்த 10.07.2025 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வு மூலம் கிடைக்கப்பெற்ற விவரங்கள் படி, கொலை செய்யப்பட்டிருப்பதாக அறிந்து வழக்கின் சட்டப்பிரிவு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல் குழுவினர் மேற்படி தேடி வந்த காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரைக் கண்டறிந்து அந்தக் காரைப் பயன்படுத்திய நபர்களைத் தேடிவந்த நிலையில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் மேற்கண்ட இறந்து போன நபரின் பிரேதத்தை சென்னை, ஏழுகிணறு பகுதியில் சம்பவயிடத்தில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

கைதானவர்களில் ஒருவர்
கைதானவர்களில் ஒருவர்

மேலும் விசாரணையில் பிரேதத்தைப் போட்டு சென்ற நபர்களை ஆந்திரா ரேணிகுண்டா மற்றும் திருத்தணி பகுதியில் தேடி வந்த நிலையில், கிடைத்த தகவலின் பேரில் மேற்கண்ட பதிவு எண் கொண்ட காரைக் கண்டறிந்து அதில் பயணித்த 5 நபர்கள் 1.சந்திரபாபு வ/35, அவரது மனைவி,

2.வினுதா கோட்டா, பெ/31, (ஆந்திர மாநிலம் ஜனசேனா கட்சியில் ஶ்ரீகாளஹஸ்தி தொகுதி பிரதிநிதி),

3.சிவகுமார், வ/36, (ஜனசேனா கட்சி –IT Wing),

4.கோபி, வ/24, காளகஸ்தி, ஆந்திர மாநிலம்,

5.ஷேக் தாசர் வ/23, (driver), ரேணிகுண்டா, ஆந்திர மாநிலம் ஆகிய ஐவரையும் திருத்தணி பகுதியில் வைத்து விசாரணை செய்து நேற்று (11.07.2025) உரிய விசாரணை அழைப்பாணை வழங்கி சென்னையில் மேற்படி காருடன் ஆஜாரானவர்களை விசாரணை செய்து சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேற்கண்ட 5 நபர்களையும் இன்று (12.07.2025) கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய கார் (Mahindra TUV-300, TN11-R-2791) பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கண்ட விசாரணையில் இறந்து போனவர் ஶ்ரீனிவாசலு (எ) ராயுடு, வ/22, த/பெ.வெங்கடராமையா, பக்சிம்பாலம், ஶ்ரீகாளகஸ்தி, திருப்பதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. ஶ்ரீனிவாசலு (எ) ராயுடு, எதிரி சந்திரபாபு மற்றும் அவரது மனைவி எதிரி வினுதா கோட்டா (ஜனசேனா கட்சியில் ‘ஶ்ரீகாளஹஸ்தி தொகுதி பிரதிநிதி) என்பவரின் வீட்டில் கடந்த 2019 ஆண்டு முதல் தங்கிக் கொண்டு அனைத்து பணிகளையும் செய்து வந்ததாகவும்,

கடந்த மார்ச் மாதம் சந்திரபாபு மனைவி வினுதா கோட்டா படுக்கை அறையில் உடை மாற்றும் பொழுது ஶ்ரீனிவாசலு (எ) ராயுடுவின் செல்போன் கட்டிலுக்குக் கீழே இருந்ததாகவும் அதனை எடுத்து பார்த்த போது கேமரா ஆன் செய்து இருந்ததாகவும், பின்பு தாங்கள் சந்தேகம் அடைந்து ஶ்ரீனிவாசலு (எ) ராயுடுவிடம் விசாரித்தபோது, அவர் ஜனசேனா கட்சியின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பஜாலா சுதீர் ரெட்டி MLA (ஶ்ரீகாளஹஸ்தி தொகுதி) என்பவரின் தரப்பினருக்குத் தங்களது மற்றும் கட்சியின் ரகசியம் மற்றும் செயல்பாடுகளை பணத்திற்காகத் தெரிவித்து வந்ததாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துள்ளது தெரிய வரவே கட்சிக்குக் கட்டுப்பட்டு தாங்கள் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி வாலிபர் ஶ்ரீனிவாசலு (எ) ராயுடுவை எச்சரித்து அவரது பாட்டி ராஜேஸ்வரி (60) என்பவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர்
கைதானவர்களில் ஒருவர்

இந்நிலையில் சமீபத்தில் ஶ்ரீனிவாசலு (எ) ராயுடுவை மேற்படி சந்திரபாபு மற்றும் வினுதா கோட்டா குடும்பத்தினர் திரும்ப வரவழைத்து சட்டவிரோதமாக 4 நாட்கள் வீட்டில் கட்டிப்போட்டு அடைத்து வைத்து அடித்து தொடர்ச்சியாக தங்களது வீட்டின் ரகசியத்தை எதிர் அணியினருக்குக் கொடுத்த தகவல்களைக் குறித்து விசாரித்து வந்த நிலையில், ஶ்ரீனிவாசலு (எ) ராயடு 07.07.2025 காலை 08.30 மணி அளவில் கழிவறைக்குச் சென்றவர் திரும்பி வராததால் சந்திரபாபு குடும்பத்தினர் கதவைத் தட்டி உள்ளனர்.

ஶ்ரீனிவாசலு (எ) ராயுடு பயத்தில் கதவை தாழிட்டு கொண்டு கதவைத் திறக்காமல் உட்கார்ந்த நிலையில் இருந்துள்ளார். உடனே எதிரி சந்திரபாபுவும், ஷேக் தாசரும் டிரில்லிங் மெஷின் கொண்டு கதவை உடைத்து இரும்பு சங்கிலியால் ஶ்ரீனிவாசலு (எ) ராயுடு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சியினர் பிரச்னை செய்யகூடும் என்று நினைத்து 07.07.2025 அன்று மாலை Mahindra XUV 500 Black Color காரில் இறந்தவரின் உடலைப் பின் சீட்டில் வைத்து, சந்திரபாபு அவரது மாமனார் பாஸ்கர் ரெட்டிக்கு காலில் அடிபட்டு இருந்ததால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வர புறப்பட்டதாகவும், அதே காரில் கோபி மற்றும் ஷேக் தாசர் உடன் வந்ததாகவும் அப்போது கார் தமிழ்நாடு எல்லையில் பழுதானதால், சந்திரபாபு இறங்கி மற்றொரு காரான TN 11 R 2791 Mahendra TUV 300 Black Colour வரவழைத்து அதில் ஶ்ரீனிவாசலு (எ) ராயுடுவை பிரேதத்தை மாற்றிவைத்து விட்டு வேறோரு காரில் சந்திரபாபு மற்றும் அவரது மாமனார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர்.

கைதானவர்களில் ஒருவர்
கைதானவர்களில் ஒருவர்

எதிரிகள் சிவகுமார், ஷேக் தாசர், மற்றும் கோபி ஆகிய மூவரும் ஏழுகிணறு பகுதியில் சம்பவயிடத்தில் கூவம் ஆற்றின் ஓரம் காரிலிருந்து பிரேதத்தைத் தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாகத் தெரியவந்தது.

இந்த வழக்கில் மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எதிரிகள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபடவுள்ளனர்.

மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வதென்ன?

தி கிரேட் காளி என அறியப்படும் தலீப் சிங் ராணா முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரமும் பாஜக பிரமுகருமாவார். சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்ற பெண் அவரது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட... மேலும் பார்க்க

பீகார் பாஜக தலைவர் கொலை; "ஒன்றுக்கும் உதவாத பாஜக துணை முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?" - தேஜஸ்வி

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில்... மேலும் பார்க்க

தேனி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்..

தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ஜெயலட்சுமி தம்பதியினர். கார்த்திக் தேனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே ஒன்... மேலும் பார்க்க

வத்தலக்குண்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மதுரை ரௌடி; கூட்டாளிகளைக் கைதுசெய்த போலீஸ்!

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற... மேலும் பார்க்க

`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் மனு அளித்த தந்தை

திருப்பூர் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமையுடன் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரால் இந்த... மேலும் பார்க்க

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க