செய்திகள் :

தேனி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்..

post image

தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ஜெயலட்சுமி தம்பதியினர். கார்த்திக் தேனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே ஒன்றறை  வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது .

இந்நிலையில், ஜெயலட்சுமியை  பிரசவத்திற்காக  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஜெயலட்சுமிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

ஜெயலட்சுமி

ஆனால், அதன் பிறகு  ஜெயலட்சுமிக்கு தொடர் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் மயக்கம் அடைந்ததால் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தும் மூன்று மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவர்கள் ஜெயலட்சுமிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும்  அப்போது தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று கூறி  அறுவை சிகிச்சை அரங்கிற்கு சென்று கர்ப்பப்பையை எடுத்து விட்டதாவும்  அதன் பின்பும்  ஜெயலட்சுமிக்கு  ரத்த கசிவு நிற்காமல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜெயலட்சுமியை பார்க்க அவரது தாயாருக்கோ கணவருக்கோ அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர் சிகிச்சை அளித்து வருவதாக கூறிய நிலையில்  ஜெயலட்சுமி இறந்துவிட்டார். 

ஜெயலட்சுமியின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்றும் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக குமுளி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகார் பாஜக தலைவர் கொலை; "ஒன்றுக்கும் உதவாத பாஜக துணை முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?" - தேஜஸ்வி

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில்... மேலும் பார்க்க

சென்னை கூவம் ஆற்றில் கிடந்த இளைஞர் சடலம்; பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது

கடந்த 8.7.2025 அன்று C3 ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்வார்ப் என்ற இடத்தில் (M.S. நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு பின்புறம்) கூவத்தில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களுடன் வேலா, வ/40, சத... மேலும் பார்க்க

வத்தலக்குண்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மதுரை ரௌடி; கூட்டாளிகளைக் கைதுசெய்த போலீஸ்!

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற... மேலும் பார்க்க

`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் மனு அளித்த தந்தை

திருப்பூர் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமையுடன் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரால் இந்த... மேலும் பார்க்க

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க