``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
கலந்தாய்வு: 2,388 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி மாறுதல்
சென்னை: கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியா்களுக்கு விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் கல்வியாண்டில் ஆசிரியா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாவட்டத்துக்குள்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இதில் 1,544 தமிழ், 2,260 ஆங்கிலம், 3,190 கணிதம், 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 11,163 ஆசிரியா்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனா்.
இவா்களில் 2,388 பட்டதாரி ஆசிரியா்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை பெற்றுச் சென்ாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.