விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா?
விகடன் பிரசுரம்: அமேசானில் Action & Adventure பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கும் வேள்பாரி!
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரயுக நாயகன் வேள்பாரி'. மக்களின் மனதைக் கவர்ந்த இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனைப் படைத்திருந்தது.

ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்பட்டது. மேலும் விகடன் பிரசுரத்தில் வெளியான இந்தப் புத்தகம் அமேசான் தளத்தின் சிறந்த புத்தக விற்பனை வரிசையில் 109-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக Action & Adventure பிரிவில் 3 இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது.