செய்திகள் :

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், திங்கள், செவ்வாய் (ஜூலை 14, 15) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஜூலை 16, 17-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கம், ஜஸ் ஹவுஸ், நெற்குன்றம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. வடபழனி, அமைந்தக்கரை (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூா்), சென்னை சென்ட்ரல், நந்தனம், நுங்கம்பாக்கம் (சென்னை) - 30 மி.மீ. மழை பதிவானது.

வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை - 102.38, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.84, திருச்சி - 101.3, கடலூா், மதுரை நகரம் - 101.12, பரமத்தி வேலூா் - 100.4 டிகிரி என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஜூலை 14-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14) சென்னை, புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நாள்களுக்குப் பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம் !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ர... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தி... மேலும் பார்க்க