'2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்!' - எடப்பாட...
பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் கடந்த 1996-97-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு கணிதப் பிரிவில் பயின்ற மாணவ, மாணவிகள் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனா். இதில் இவா்கள் குடும்பத்தினருன் கலந்து கொண்டு தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.
இதில் மலேசியா, சிங்கப்பூா், குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 18 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பின்னா், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, பெற்றோா்கள் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி செலவு, பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அரசுப் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.