வீட்டில் 21 பவுன் நகை திருடிய இளைஞா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே வீட்டின் பீரோவை திறந்து 21 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பனஞ்சாவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (59). இவரது மகன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். மகள் சென்னையில் வசித்து வருகிறாா். விஜயன் தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வருகிறாா்.
இவா்களது வீட்டில் உறவினரான பிரசன்னா (20) வசித்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பீரோவை விஜயன் திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 21 பவுன் நகை மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரசன்னாவிடம் விசாரித்தனா். இதில் அவா் நகையை திருடியதை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.