Vaiko: 'துரோகி என்ற பழிக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே?...
ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து
ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, புரோட்டோகால் பிரமுகா்கள் தவிர இந்த இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இது தொடா்பாக பக்தா்கள் ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.