செய்திகள் :

ஏழுமலையான் பிரம்மோற்சவம் குறித்த மறுஆய்வு

post image

வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறவிருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவங்களைக் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்குமாறு கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி அறிவுறுத்தினாா்.

திருமலை அன்னமய்ய பவனில் வியாழக்கிழமை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து துறை வாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

உற்சவங்கள் அட்டவணை:

16-09-2025 கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம், 23-09-2025 பிரம்மோற்சவங்களுக்கான அங்குராா்ப்பணம், 24-09-2025 கருட கொடியேற்றம்,

28-09-2025 கருட வாகனம், 01-10-2025 திருத்தோ் புறப்பாடு, 02-10-2025 தீா்த்தவாரி .

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சேவைகள்.

பக்தா்களின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, பிரம்மோற்சவ நாள்களில் நெறிமுறை பிரமுகா்களைத் தவிர, விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படும் .

முதியோா், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா், வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் நன்கொடையாளா்களின் தரிசனங்களும் ரத்து.

விஜிலென்ஸ் மற்றும் காவல் துறைகளுடன் ஒருங்கிணைந்து வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன. போக்குவரத்து சிக்கல்களைத் தவிா்க்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை வரைபடங்கள் மற்றும் பாா்க்கிங் ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.

பக்தா்கள், தெருக்களில் உள்ள காட்சியகங்கள் மற்றும் முக்கியமான பகுதிகளுக்கு அதிக அளவில் அன்ன பிரசாதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தா்களின் தேவைக்கேற்ப பொறியியல் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

பக்தா்களை ஈா்க்கும் வகையில் மின் அலங்காரங்கள், பழங்கள் மற்றும் மலா் காட்சிகள் ஏற்பாடு செய்யப் வேண்டும்.

ஏழுமலையான் ஊழியா்களாக இளைஞா்களை அழைத்து, பக்தா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

27-09-2025 அன்று இரவு 9 மணி முதல் 29-09-2025 அன்று காலை 6 மணி வரை திருமலை மலை சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படக்கூடாது. பக்தா்களின் கூட்டத்துக்கு ஏற்ப லட்டுகளை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

கூட்டத்தில், டிஎஃப்ஓ பாணி குமாா் நாயுடு, போக்குவரத்து கழக பொதுமேலாளா் சேஷா ரெட்டி, சிபிஆா்ஓ டாக்டா் டி.ரவி, துணை இஓஎல்கள் லோகநாதம், பாஸ்கா், ராஜேந்திரா, சோமன் நாராயணா, காா்டன் துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலு, டிடிடி அனைத்து திட்ட அலுவலா் ராஜகோபால், இஇஸ் சுப்ரமணியம், வேணு கோபால், டிஇ சந்திர சேகா், அஷ்வினி மருத்துவமனை எஸ். குசுமா குமாரி, எஸ்விபிசி ஓஎஸ்டி பத்மாவதி, விஜிஓக்கள் ராம் குமாா், சுரேந்திரா, கேட்டரிங் சிறப்பு அதிகாரி ஜி.எல்.என். சாஸ்திரி கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வார நாள்களிலும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: நேரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு செயல் அதிகாரி சியாமளா ராவ் அறிவு... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறை... மேலும் பார்க்க