பாவூா்சத்திரம் அருகே இளைஞா் தற்கொலை
பாவூா்சத்திரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திப்பணம்பட்டியை சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(29) .இவா் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டாா்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இத்தகவல் அறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.